india is chasing easy target in under nineteen world cup final

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு 217 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் ஜூனியர் உலகக்கோப்பை நடந்து வருகிறது. டிராவிட் பயிற்சியளிக்கும் இந்திய அணி, தொடர் முழுதும் சிறப்பாக விளையாடி வருகிறது. தோல்வியையே சந்திக்காமல், இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டுள்ளது.

இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில், இஷான் போரல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷிவம் மாவி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

ஜூனியர் உலகக்கோப்பையை வெல்ல 217 என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது. ப்ரித்வி ஷா, ஷப்மன் கில் என இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். நல்ல பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணி, இலக்கை எட்டி உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.