சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முழுமையாகத் தகுதிப் பெற்றுள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு (பிஎஃப்ஐ), சர்வதேச குத்துச்சண்டை சங்கமான ஏஐபிஏ முழு உறுப்பினர் அந்தஸ்தை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
"இந்தியாவுக்கு முழுமையான உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதென ஏஐபிஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது' என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முழுமையாகத் தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
