india first batting and shikar dhawan out

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி டெல்லியில் தொடங்கியது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கடந்த ஆட்டத்தில் ஆடாத ஷிகர் தவான் இந்த போட்டியில் விளையாடுவதால், தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அதனால், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் ஷிகர் தவானும் களமிறங்கினர். களமிறங்கியது முதலே இருவரும் அடித்து ஆடினர்.

அதிரடியாக ஆடிய ஷிகர் தவன், 23 ரன்களுக்கு பெரேராவின் பந்துவீச்சில் வெளியேறினார். இதையடுத்து முரளிவிஜயுடன் புஜாரா கைகோர்த்தார்.

டிரிங்ஸ் இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 51 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜயும் புஜாராவும் களத்தில் உள்ளனர்.