சீனாவில் ஹாங்சோவில் நடந்து வந்த 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் முடிந்துள்ளது. தற்போது நிறைவு விழா நடந்து வருகிறது. இதில், இந்தியா 111 பதக்கங்களுடன் 5ஆவது இடம் பிடித்துள்ளது.

பாரா ஏசியாட் எனப்படும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய பாராலிம்பிக் குழுவால் உடல் ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல் முறையாக ஹாங்சோவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

Australia vs New Zealand, World Cup 2023: முதல் உலகக் கோப்பையின் சதத்தை சாதனையாக மாற்றிய டிராவிஸ் ஹெட்!

இதில், 41 நாடுகளைச் சேர்ந்த 2405 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 19 விளையாட்டுகளை கொண்ட இந்த ஆசிய விளையாட்டு போட்டியானது 341 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா 14 தங்கம், 17 வெள்ளி மற்றும் 34 வெண்கலம் என்று மொத்தமாக 65 பதக்கங்களை வென்றது.

இதையடுத்து 2014 ஆம் ஆண்டு தென் கொரியாவின் இன்சியானில் 2ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியா 11 தங்கம், 9 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என்று மொத்தமாக 57 பதக்கங்களை கைப்பற்றியது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது.

Australia vs New Zealand: தொடர்ந்து 3ஆவது முறையாக 350 ரன்களுக்கு மேல் குவித்து ஆஸ்திரேலியா சாதனை!

இந்த நிலையில் தான் சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், 44 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 22 போட்டிகள் கொண்ட இந்த விளையாட்டில் மொத்தமாக 501 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் தற்போது நடக்கும் நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

தரம்சாலாவில் சிக்ஸர் மழை – வான வேடிக்கை காட்டிய வார்னர், டிராஸ் ஹெட் – ஆஸி, 388 ரன்கள் குவிப்பு!

இந்த நிலையில் தான் இந்த பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா துப்பாக்கி சுடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், படகுப் போட்டி, குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், பளூதூக்குதல், தடகளப் போட்டி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் என்று பல பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என்று மொத்தமாக 111 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இந்த 4ஆவது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் முறையாக 100க்கும் அதிகமான பதக்கங்களை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தியா 29 தங்கம் 31 வெள்ளி மற்றும் 51 வெண்கலம் என்று மொத்தமாக 111 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் நீளம் தாண்டுதலில் தங்கமும், துளசிமதி முருகேசன் பேட்மிண்டன் பிரிவில் தங்கமும் வென்றுள்ளனர். வட்டு எறிதல் போட்டியில் முத்துராஜா வெண்கலப் பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதல் பிரிவில் மாரியப்பன் தங்கவேலி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற தர்மராஜ் சோலைராஜ், துளசிமதி முருகேசனுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து!

தொடர்ந்து 4ஆண்டுகளாக சீனா முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் சீனா 214 தங்கம், 167 வெள்ளி மற்றும் 140 வெண்கலம் என்று மொத்தமாக 521 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக சீனாவின் ஹாங்சோவில் நடந்த 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என்று மொத்தமாக 107 பதக்கங்களை வென்று சரித்திர சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…