Asianet News TamilAsianet News Tamil

ஒரு கோல் கூட அடிக்க விடாமல் பெலாரஸை திணறடித்த இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு வெற்றி…

Belarus is also overwhelmed by letting a goal to hit the Indian hockey team won the women ...
india defeated-uzbekistan-qualified-for-the-world-group-WKGYZG
Author
First Published Apr 10, 2017, 11:10 AM IST


உலக மகளிர் ஹாக்கி லீக் "ரவுண்ட்-2' போட்டியில் இந்திய அணி தனது அரையிறுதியில் 4-0 என்ற கோல் கணக்கில் பெலாரஸ் அணியைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

கனடாவின் வான்கோவர் நகரில் உலக மகளிர் ஹாக்கி லீக் "ரவுண்ட்-2' நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய அணி, பெலாரஸ் அணியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அசத்தலாக ஆடியது இந்திய அணி. அதேசமயம் பெலாரஸ் அணிக்கு 4 மற்றும் 9-ஆவது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் பெலாரஸின் கோல் முயற்சியை இந்திய பின்கள வீராங்கனைகள் அபாரமாக முறியடித்தனர்.

இதன்பிறகு அசத்தலாக ஆடிய இந்திய அணி 13-ஆவது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கியது. இந்த கோலை பெனால்டி வாய்ப்பில் குர்ஜித் கௌர் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து 20-ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கேப்டன் ராணி கோலாக்கினார்.

இதன்பிறகு 40-ஆவது நிமிடத்தில் பெலாரஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் பெலாரஸின் கோல் முயற்சியை இந்திய கோல் கீப்பர் சவீதா முறியடித்தார்.

அதே நிமிடத்தில் இந்திய கேப்டன் ராணி அற்புதமாக கோலடிக்க, இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

மீண்டும் 42-ஆவது நிமிடத்தில் பெலாரஸ் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அதையும் இந்திய கோல் கீப்பர் சவீதா முறியடித்தார்.

கடைசி கால் ஆட்டத்தில் பெலாரஸ் அணி கோலடிக்க தீவிரம் காட்டியபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.

அதேநேரத்தில் 58-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்திய வீராங்கனை குர்ஜித் கெüர் கோலடிக்க, இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

Follow Us:
Download App:
  • android
  • ios