India defeated Uzbekistan qualified for the World Group play
ஆசிய - ஓசியானியா குழு-1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலக குழு பிளேக்கு தகுதிப் பெற்றது.
உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக ஆசிய - ஓசியானியா குழு-1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பெங்களூரில் மூன்று நாள்கள் நடைபெற்து.
இந்தப் போட்டியின் முதல் இரு நாள்கள் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டங்கள், இரட்டையர் ஆட்டம் ஆகியவற்றில் வெற்றி கண்டது இந்தியா. அப்போதே பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா.
இந்த நிலையில் மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் மற்றும் உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் மோதினர்.
அதில், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் சஞ்சார் ஃபெய்ஸியேவை வீழ்த்தினார் இந்தியாவின் ராம்குமார்.
இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 5-7, 3-6 என்ற நேர் செட்களில் உஸ்பெகிஸ்தானின் இஸ்மெயிலிடம் வீழ்ந்தார்.
இதன்படி, இந்திய அணி 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் உலக குரூப் பிளே ஆப் சுற்றில் விளையாட தகுதிப் பெற்றுள்ளது.
உலக குரூப் பிளே ஆப் போட்டி வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
