India 33-run win over New Zealand
இந்தியாவின் பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியது.
இந்தியாவின் பிசிசிஐ தலைவர் லெவன் அணி மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 343 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பிசிசிஐ தலைவர் அணி 47.1 ஓவர்களில் 310 ஓட்டங்களுக்கு சுருண்டது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் ராஸ் டெய்லர், டாம் லதாம் ஆகியோர் அபாரமாக ஆடி சதம் கடந்தனர்.
டெய்லர் 83 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 102 ஓட்டங்கள் எடுத்தார்.
லதாம் 97 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 108 ஓட்டங்கள் அடித்தார்.
கப்டில் 32 ஓட்டங்கள், மன்ரோ 26 ஓட்டங்கள், நிகோல்ஸ் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். டிம் செதி டக் ஔட் ஆனார். சேன்ட்னர் 29 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
பிசிசிஐ தலைவர் அணி தரப்பில் உனத்கட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கரண் சர்மா 2 விக்கெட்கள், தவல் குல்கர்னி ஒரு விக்கெட் எடுத்தனர்.
பின்னர் ஆடிய பிசிசிஐ தலைவர் லெவன் அணியில் கருண் நாயர், குருகீரத் சிங் மட்டும் அரைசதம் கடந்தனர். இதில் 54 பந்துகளுக்கு 7 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்து கருண் நாயர் ஆட்டமிழந்தார்.
குருகீரத் சிங் 46 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.
உனத்கட் 44 ஓட்டங்கள், ஷ்ரேயஸ் ஐயர் 24 ஓட்டங்கள், குல்கர்னி 24 ஓட்டங்கள், பிருத்வி ஷா 22 ஓட்டங்கள், கரண் சர்மா 19 ஓட்டங்கள், செüதரி 12 ஓட்டங்கள் எடுத்தனர்.
ரிஷப் பந்த், மிலிந்த் குமார் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, ஷாபாஸ் நதீம் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூஸிலாந்து தரப்பில் சேன்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டிம் செüதி 2 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட், ஐஸ் சோதி, ஹென்றி ஆகியோர் தலா ஒரு
விக்கெட்டும் எடுத்தனர்.
இறுதியில் இந்தியாவின் பிசிசிஐ தலைவர் லெவன் அணியை நியூஸிலாந்து அணி 33 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
