India - Pakistani Confrontation in Asian Cup Hockey
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் "சூப்பர் 4 ஸ்டேஜ்' சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று அட்டகாசமாய் மோத இருக்கின்றன.
பத்தாவது ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் சூப்பர் 4 ஸ்டேஜ் சுற்றைப் பொருத்த வரை இதுவரை ஆடிய இரண்டு ஆட்டங்களில் விளையாடியுள்ளது இந்தியா. அதில் ஒரு வெற்றியையும், மற்றொரு ஆட்டத்தை சமனும் செய்துள்ளது இந்தியா.
ஆனால், பாகிஸ்தான் அணி இரண்டு ஆட்டங்களில் ஒரு தோல்வியையும், ஒரு ஆட்டத்தை சமனும் செய்துள்ளது.
இந்தப் போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
சமீபத்திய ஆட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்திய அணி, அதே நம்பிக்கை மற்றும் உத்வேகத்துடன் களம் காணுகிறது.
இந்தப் போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா அதிக கோல்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளதால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தாலே இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறும்.
அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வென்றாலும், தென் கொரியா - மலேசியா அணிகள் மோதும் மற்றொரு ஆட்டத்தின் முடிவே பாகிஸ்தானுக்கான இறுதிச் சுற்று வாய்ப்பை நிர்ணயிக்கும்.
