India - New Zealand crash last T-20 today Who will win
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
மொத்தம் மூன்று ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. எனவே, கடைசி ஆட்டமான இன்று எந்த அணி தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, டி20-ல் கடந்த ஆறு ஆட்டங்களில் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் முறையாக வாகை சூடியிருந்தது.
எனினும், அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாத வகையில் 2-வது ஆட்டத்தில் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து.
இந்தியாவின் தொடக்க வீரர்களான ரோஹித், தவன் ஜோடியும், மிடில் ஆர்டரில் கேப்டன் கோலி, தோனி ஆகியோரும் அணிக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.
அதிரடி ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவும், பந்துவீச்சைப் பொருத்த வரையில் பூம்ராவும், புவனேஸ்வரும் பலம் சேர்க்கின்றனர். அக்ஸர் படேல், யுவேந்திர சாஹலுடன் இணைந்து நியூஸிலாந்து வீரர்களை எதிர்கொள்வர்.
நியூஸிலாந்து அணியைப் பொருத்த வரையில் காலின் மன்ரோ, டாம் லதாம், கப்டில் உள்ளிட்டோர் அணியின் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
பந்துவீச்சில் டிரென்ட் போல்ட் இந்த ஆட்டத்திலும் ஆட்டம் காட்டுவார் என்று மேலும் அவருக்கு உதவியாக சேன்ட்னர், கிரான்ட்ஹோம் ஆகியோரும் உள்ளனர்.
