ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் நாளை மோத உள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவனை பார்க்கலாம்.
IND vs NZ ICC champions Trophy 2025 Playing 11: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் நாளை (மார்ச் 9) பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நாளை நண்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. மார்ச் 4 அன்று நடந்த முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. மார்ச் 5 அன்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டாரா?
பலம் வாய்ந்த இரு அணிகள் கோப்பையை வெல்ல வரிந்து கட்டுவதால் உலகம் முழுவதும் இந்த போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய அதே அணி தான் பைனலில் விளையாடும் என எதிர்பார்க்கபடுகிறது. காலில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பைனலில் விளையாட மாட்டார் என தகவல் பரவியது.
இந்திய அணி பிளேயிங் லெவன்
ஆனால் காயம் குணமடைந்து விட்டதால் இப்போது அவர் விளையாடுவது உறுதியாகி உள்ளது. ஆகையால் இந்திய அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் வருண் சக்ரவர்த்தி.
4 ஸ்பின்னர்கள், ஒரு பாஸ்ட் பவுலர்
ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் வழக்கம்போல் ஒப்பனிங்கில் விளையாடுவார்கள். நடுவரிசையில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் பலம் சேர்க்க இருக்கின்றனர். பின்வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் அதிரடியில் ரன் சேர்க்க உள்ளனர். 4 ஸ்பின்னர்கள், ஒரு பாஸ்ட் பவுலர், ஒரு மீடியம் பாஸ்ட் பவுலர் என இந்திய அணி களமிறங்குகிறது.
நியூசிலாந்து அணி பிளேயிங் லெவன்
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் பாஸ்ட் பவுலர் மேட் ஹென்ரி காயம் காரணமாக விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. நியூசிலாந்து அணியின் பிளேயிங் லெவன்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, வில் யங், மைக்கேல் பிரேஸ்வெல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), வில் ஓ'ரூர்க், க்ளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜேமிசன், டேரில் மிட்ச்செல்
