சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா, நியூசிலாந்து போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதனால் இந்திய அணி வெற்றி பெற வேண்டி நாடு முழுவதும் உள்ள பிரபலமான கோயில்களில் ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

வாரணாசி உள்ள சாரங் நாத் மஹாதேவ் கோயில் உள்பட நாடு முழுவதும் உள்ள பிரபலமான கோயில்களில் பிரார்த்தனையில் ஈடுப்ட்டனர். அங்கு இந்திய அணி வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இந்தியா, நியூசிலாந்து இறுதிப்போட்டியை கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 



இந்தியா, நியூசிலாந்து பைனல் குறித்து ஏஎன்ஐவிடம் பேசிய கிரிக்கெட் கோச் சைஃப் அஹ்மத், ''இன்று இந்தியா சாம்பியன்ஸ் டிராபி ஜெயிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த பைனலில் நமது அணி பெரிய பலமே நம்ம ஸ்பின் அட்டாக்தான். நான்கு உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களுடன் விளையாடுறது நமக்கு ஒரு பெரிய அட்வான்டேஜ். கண்டிப்பா ட்ராபி இந்தியா வந்து சேரும், 25 வருஷ காத்திருப்பு முடிவுக்கு வரும்'' என்று கூறியுளள்ளார். 

"இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் நடக்கப்போகும் பைனல் சூப்பரா இருக்கும். இந்திய அணிக்கு தன்னோட பலம், பலவீனம் குறித்து நன்றாக தெரியும். நியூசிலாந்து ஃபீல்டிங் ரொம்ப சூப்பரா இருக்கும் - கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ்லாம் வேற லெவலில் கேட்ச் பிடிப்பார்கள். விராட் கோலி தன்னோட பெஸ்ட் ஷாட்ஸ ஆடுனா, அந்த கேட்ச்ச பிடிக்கிறது ரொம்ப கஷ்டம். நம்மிடம் உலகத்தரம் வாய்ந்த பௌலர்களும், பேட்ஸ்மேன்களும் இருக்காங்க. இறுதிப்போட்டியில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெறும்'' என்று மற்றொரு கோச தெரிவித்துள்ளார். 

இந்தியாவும், நியூசிலாந்தும் இந்த தொடரில் ஏற்கெனவே லீக்கில் மோதி இருக்கிறார்கள். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆகையால் இந்த முறை நியூசிலாந்து விடாமல் போராடும். இதனால் இறுதிப்போட்டி ரொம்ப சசுவார்ஸ்யமாக இருக்கும்.