In the thrilling situation England - the West Indies clash today
இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இன்று நடைபெறுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக உள்ளது இங்கிலாந்து.
அதேநேரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 ஆட்டத்தில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய நிலையில் ஒரு நாள் தொடரில் களம் இறங்குகிறது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இந்தத் தொடரை 5-0 என்ற கணக்கிலோ அல்லது 4-0 என்ற கணக்கிலோ வென்றால் மட்டுமே 2019 உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.
வரும் 30-ஆம் தேதியன்று தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள், உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும்.
தற்போதைய நிலையில் இலங்கை 86 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் 78 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
