If Stein had been ahead of us he would have brought down India - South Africa captain confirmed ...

வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இருந்திருந்தால் இன்னும் குறைந்த ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருக்க முடியும் என்று தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் உறுதியாக தெரிவித்தார்.

முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்ஸில் 130 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியாவுக்கு 208 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு நாள் கைவசம் இருந்தபோதிலும், இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்தியாவால் வெறும் 135 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு பிளெஸ்ஸில் செய்தியாளர்களிடம் கூறியது:

"இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் பதற்றமாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மிகச் சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்திய அணியை குறைந்த ஓட்டங்களில் கட்டுப்படுத்தினோம்.

காயம் காரணமாக அணியில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இருந்திருந்தால் இன்னும் குறைந்த ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருக்க முடியும்.

எனினும், அவரது இடத்தை பிலாண்டர் பூர்த்தி செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்" என்று கேப்டன் பிளெஸ்ஸிஸ் தெரிவித்தார்.