ICC rankings England top in the list india got second
ஐசிசி சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதலிடம் பெற்றுள்ளது.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் குழு வெளியிட்டு வருகிறது. டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
அதேநேரத்தில், ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியாவை பின்னுக்கு தள்ளு இங்கிலாந்து முதலிடம் பெற்றது. இங்கிலாந்து அணி 125 புள்ளிகளும், இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு சென்றது.
கடந்த 2015-16, 2016-17 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் இத்தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 113 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா மூன்றாவது, நியூஸிலாந்து அணி 4-ஆம் இடத்திலும், 104 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி 5-ஆம் இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான் 6-வது இடத்திலும், வங்கதேசம் 7-வது இடத்திலும், இலங்கை 8-வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 10-வது இடத்திலும், ஜிம்பாப்வே 11-வது இடத்திலும், அயர்லாந்து 12-வது இடத்திலும் உள்ளன.
