ICC investigates Sri Lanka in corruption and gambling complaints
தொடர் ஊழல் மற்றும் சூதாட்ட புகார்களால் இலங்கை அணியை ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக பங்கேற்கும் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரனதுங்கா கிரிக்கெட் வீரர்கள் மீது சூதாட்ட புகார் ஒன்றினை தெரிவித்திருந்தார். அதில் அவர் 2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி மோசமாக தோற்றதற்கு சூதாட்டமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமின்றி முன்னாள் வேகப்பந்து வீரரும், முன்னாள் தேசிய அணித் தேர்வாளருமான ப்ரமோதய விக்ரமசிங்கேவும் சமீபத்தில் இலங்கை அணி வீரர்கள் மீது சூதாட்டப் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் சூதாட்டப் புகார்களின் எதிரொலியாக ஐ.சி.சி.எனப்படும் சர்வதேச கிரிக்கெட் குழுவின் ஊழல் தடுப்பு குழு இலங்கை அணி மீது விசாரணையை தொடங்கி உள்ளது.
ஐ.சி.சி. ஊழல் தடுப்பு குழு பொதுமேலாளர் அலெக்ஸ் மார்ஷல் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.
