I will face no difficulty to beat the French Open title - Nadal hopes ...

பதினோறாவது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்ல எந்த சிரமத்தையும் சந்திக்கத் தயாராக உள்ளே என்று ரஃபேல் நடால் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல்நிலை வீரர் ரஃபேல் நடால் (31). இவர் இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்த சீசனில் மாண்டோகார்லோ, பார்சிலோனாவில் 11-வது பட்டங்களையும், ரோமில் 8-வது இத்தாலி ஓபன் பட்டத்தையும் வென்று அசத்தினார். 

நடால் டென்னிஸ் விளையாட்டில் களிமண் மைதானத்தில் ஆடுவதில் சிறந்து விளங்குகிறார். இந்த நிலையில் பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் நாளை பாரிஸில் தொடங்குகின்றன. 

இதில் முக்கிய வீரர்களான ரோஜர் பெடரர், ஆண்டி முர்ரே ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 79 வெற்றிகள், 2 தோல்விகளுடன் பட்டம் வெல்லும் வாய்ப்புள்ள வீரராக நடால் கருதப்படுகிறார்.

காயத்தினால் பல மாதங்கள் கழித்து முன்னாள் சாம்பியன்களான ஜோகோவிச், வாவ்ரிங்காவை விளையாட வருகின்றனர். 

இந்தப் போட்டி குறித்து நடால், "எந்த ஒரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே நோக்கமாக கொள்வேன். 

பதினோறாவது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வெல்ல எந்த சிரமத்தையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். 

ஜோகோவிச் சிறந்த வீரராக திகழ்கிறார். மாட்ரிட் ஓபன் போட்டியில் தோல்வி எந்த விதத்திலும் என்னை பாதிக்காது" என்று அவர் தெரிவித்தார்.