MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • அரையிறுதியில் மழை பெய்தால் இந்தியாவுக்கு ஆபத்து.. இங்கிலாந்து பைனல்.. ஐசிசி ரூல்ஸ்.. ரசிகர்கள் ஷாக்!

அரையிறுதியில் மழை பெய்தால் இந்தியாவுக்கு ஆபத்து.. இங்கிலாந்து பைனல்.. ஐசிசி ரூல்ஸ்.. ரசிகர்கள் ஷாக்!

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஐசிசி சிறப்பு விதிகளை வகுத்துள்ளது. அரையிறுதிக்கு கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டி நாளில் மழை குறுக்கிட்டால், ஆட்டத்தை முடிக்க கூடுதலாக 90 நிமிடங்கள் வழங்கப்படும்

1 Min read
Author : Rayar A
Published : Mar 03 2026, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி போட்டி
Image Credit : Getty

இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி போட்டி

டி20 உலகக் கோப்பை 2026 பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மார்ச் 5ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அரையிறுதியில் ரிசர்வ் டே உண்டு
Image Credit : X/ICC

அரையிறுதியில் ரிசர்வ் டே உண்டு

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஐசிசி சிறப்பு விதிகளை வகுத்துள்ளது. அரையிறுதிக்கு கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டி நாளில் மழை குறுக்கிட்டால், ஆட்டத்தை முடிக்க கூடுதலாக 90 நிமிடங்கள் வழங்கப்படும். அன்று போட்டி சாத்தியமில்லை என்றால், ரிசர்வ் நாளில் போட்டி எந்த இடத்தில் முடிக்கப்பட்டதோ அந்த இடத்தில் இருந்து தொடங்கும்.

34
ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் இங்கிலாந்து பைனல்
Image Credit : Getty

ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால் இங்கிலாந்து பைனல்

ரிசர்வ் நாளன்றும் மழையால் ஆட்டம் நடைபெறவில்லை என்றால், பவுல்-அவுட் அல்லது டாஸ் இருக்காது. சூப்பர்-8 புள்ளிப்பட்டியல் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இந்திய அணியை பொறுத்தவரை சூப்பர் 8 சுற்றில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. 

அதே வேளையில் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனால் ரிசர்வ் டே நாளிலும் போட்டி மழையால் தடைபட்டால் இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

44
உலகக்கோப்பையில் யார் ஆதிக்கம்?
Image Credit : BCCI\Twitter

உலகக்கோப்பையில் யார் ஆதிக்கம்?

இந்திய அணி சூப்பர் 8 சுற்றை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கியது. மறுபுறம் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை ஆகிய அணிகளை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணியோ சூப்பர்-8ல் அனைத்து போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு கெத்தாக நுழைந்துள்ளது.

 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து இரண்டு முறை மோதியுள்ளன. 2022ல் இங்கிலாந்தும், 2024ல் இந்தியாவும் வென்றன. மொத்தமாக இதுவரை 5 முறை மோதியதில், இங்கிலாந்து 3, இந்தியா 2 முறை வென்றுள்ளன.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டி20 உலகக் கோப்பை
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Recommended image2
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!
Recommended image3
Virat Kohli: 'இந்த குணம் என்னை விட்டு எப்போதும் போகாது'.. வெளிப்படையாக போட்டு உடைத்த விராட் கோலி!
Related Stories
Recommended image1
இந்தியா vs இங்கிலாந்து.. டி20 உலகக்கோப்பையில் கெத்து காட்டியது யார்? முழு ரிப்போர்ட்!
Recommended image2
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி.. அபிஷேக் சர்மா நீக்கம்.. அதிரடி வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved