படகில் அணிவகுப்பு நிகழ்ச்சி – ஒலிம்பிக் ஸ்டேடியத்திற்கு வெளியில் தொடக்க விழா – எப்படி நேரலையில் பார்ப்பது?
பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது இன்று ஜூலை 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல் முறையாக ஒலிம்பிக் ஸ்டேடியத்திற்கு வெளியில் அதுவும் செய்ன் நதியில் தொடக்க விழா நடைபெறுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். செய்ன் நதியில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். எப்போதும் ஒலிம்பிக் தொடரானது மைதானத்திற்குள் தான் நடைபெறும். ஆனால், வரலாற்றில் முதல் முறையாக பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது ஒலிம்பிக் ஸ்டேடியத்திற்கு வெளியில் நடைபெறுகிறது.
இதில் அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களது நாட்டிற்காக கொடியை ஏந்திச் சென்று அணிவகுப்பு நடத்துவார்கள். இந்தியா சார்பில் சரத் கமல் மற்றும் பிவி சிந்து இருவரும் இந்திய கொடியை ஏந்திச் சென்று அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர். முதல் நாடாக ஒலிம்பிக்கை தாயகமாக கொண்ட கிரீஸ் அணி வகுப்பு நிகழ்ச்சியை தொடங்குகிறது. இந்தியா 84ஆவது நாடாகவும், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக கடைசியாக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றன.
பிரான்ஸ் கடைசியாக அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. இரவு 11 மணிக்கு தொடங்கும் தொடக்க நிகழ்ச்சி 3 மணி வரையிலும் நடைபெறுகிறது. வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியானது, ஆஸ்டர்லிட்ஸில் தொடங்கி ஈபிள் டவருக்கு முன்பு உள்ள உள்ள டிரொக்காடோவில் முடிவடையும். பின்னர், அங்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகல், பிரான்ஸ் நாட்டு விமானப்படையினரின் வான் நிகழ்ச்சிகள், லேசர், டிரோன் என்று அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஈபிள் டவருக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படுகிறது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவை ஸ்டார் ஸ்போட்ஸ் 18 1 ஹெச்டி, ஸ்போர்ட்ஸ் 18 1 எஸ்டி சேனல்களில் நேரடியாக பார்க்கலாம்.
Sharath Kamal: ஒலிம்பிக்கில் சிந்துவுடன் தேசிய கொடியை ஏந்தி செல்லும் தமிழன்; யார் இந்த சரத் கமல்?
- 2024 Paris Games
- Emmanuel Macron
- French President Emmanuel Macron
- IOA President
- India at the 2024 Summer Olympics
- Indian Olympic Association President PT Usha
- Indian Sailing
- Indias Schedule for Paris Olympics 2024
- International Olympic Committee
- Nethra Kumanan
- Olympic Games Paris 2024
- Olympic Schedule 2024
- Olympics Parade 2024
- Paris 2024 Olympics
- Paris Olympics 2024
- Sailing
- Summer Olympics 2024
- Water Polo