Hockey World League Indias first match held between Australia and Australia

ஹாக்கி உலக லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் ஆட்டம் சமனில் முடிந்தது.

ஹாக்கி உலக லீக் போட்டியில் உலகின் சிறந்த 8 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டியில் 'பி' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் இங்கிலாந்து, ஜெர்மனி அணிகள் இணைந்துள்ளன. 'ஏ' பிரிவில் ஆர்ஜென்டீனா, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின் அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டிய நிலையில், ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் நேற்ரு 'பி' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6-வது நிமிடத்தில் ஒரு பெனால்டி வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது. அதை ரூபீந்தர் பால் சிங் கோலாக்க முயற்சி செய்தார். எனினும், ஆஸ்திரேலிய கோல் கீப்பர் லாவகமாக அதை தடுத்து நிறுத்தினார்.

முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து, 20-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்தீப் சிங் முதல் கோலைப் பதிவு செய்தார். அதற்கு அடுத்த நிமிடமே ஆஸ்திரேலியா தனது கோலைப் பதிவு செய்து சமநிலை வகித்தது.

இதனையடுத்து, இரண்டாவது பாதி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இதையடுத்து, ஆட்டம் டிரா ஆனது.