உலகக்கோப்பை ஜுனியர் ஹாக்கியில் இந்தியா சாம்பியன் வீரர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் பரிசுத்தொகை மத்திய அரசு அறிவிப்பு
உலகக்கோப்பை வென்ற இந்திய ஜுனியர் ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி, பலம்வாய்ந்த பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஹாபர்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்தியஅணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்திய ஜூனியர் ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்காக இந்திய அணிக்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. Vijay Goel அறிவித்துள்ளார்.
