Hero Intercontinental Cup - Many teams collide.
ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூஸிலாந்து, சீன தைபே அணிகள் மோதுகின்றன.
ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ளது.
மும்பை புட்பால் அரேனா சார்பில் ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 1 முதல் 10-ஆம் தேதி வரை நடக்கிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்ற அனுபவம் கொண்ட தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் இதில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் தலா ஒருமுறை மோதுகின்றன. முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி பங்கற்பதற்கு தயாராகும் வகையில்இந்த போட்டிகள் உதவும்.
மும்பையில் அனைத்து போட்டிகளும் நடக்கின்றன என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
