Asianet News TamilAsianet News Tamil

தடகளத்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் தேசிய அளவிலான சாதனைகளின் முழு பட்டியல்

தடகளத்தில் தேசியளவில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் படைத்த சாதனைகளை பார்ப்போம்.
 

here is the full list of national athletics record holders of india
Author
Chennai, First Published Aug 6, 2022, 9:40 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்தார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான்; அதுவும் நீரஜ் சோப்ராவின் மூலம் தங்கமாக கிடைத்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தாலும், அவர் எறிந்த 87.58மீ என்பது அவரது சிறந்த எறிதலும் இல்லை. தேசிய அளவிலான ரெக்கார்டும் இல்லை. அந்தளவிற்கு தேசியளவில் தடகளத்தில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. 

அந்தவகையில், தடகளத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தேசிய அளவிலான ரெக்கார்டுகளை பார்ப்போம்.

100மீ ஓட்டப்பந்தய தேசிய ரெக்கார்டு:

ஆடவர் 100மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அமியா குமார் 10.26 வினாடிகளில் ஓடி தேசியளவிலான ரெக்கார்டை தன்வசம் வைத்துள்ளார். 2016 நேஷனல் ஃபெடெரேஷன் கோப்பையில் இந்த சாதனையை படைத்தார்.

மகளிர் 100மீ பிரிவில் டுட்டீ சந்த் 11.17 வினாடிகளில் 100மீ தொலைவை கடந்து சாதனை படைத்துள்ளார்.

200மீ தேசிய ரெக்கார்டு:

2018 செக் குடியரசில் 20.63 வினாடிகளில் 200 மீட்டர் ஓடிய முகமது அனாஸ் தாஹியாவின் சாதனையை, 2022 ஃபெடெரேஷன் கோப்பையில் 20.52 வினாடிகளில் 200 மீட்டர் ஓடி அம்லான் பார்கொஹைன் முறியடித்தார். இப்போது அம்லான் தான் அதிவேக 200மீ சாதனையை வைத்துள்ளார்.

200மீ மகளிர் பிரிவில் சரஸ்வதி சாஹா 22.82 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

400மீ தேசிய ரெக்கார்டு:

2019ல் செக் குடியரசில் நடந்த க்ளாட்னோ தடகள போட்டியில் 400 மீட்டரை 45.21 வினாடிகளில் ஓடியதுதான் 400 மீட்டரில் தேசியளவிலான சாதனையாக உள்ளது.

2018 ஆசிய போட்டிகளில் ஹீமா தாஸ் 50.79 வினாடிகளில் 400 மீட்டரை கடந்ததுதான் மகளிர் 400மீ பிரிவில் தேசியளவிலான சாதனை.

800மீ ஓட்டப்பந்தய தேசிய ரெக்கார்டு:

ஆடவர் 800 மீட்டரில் 1:45.65 என்ற ஜின்சன் ஜான்சனின் சாதனை தான் தேசிய ரெக்கார்டு. 2018ல் கவுகாத்தியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனையை படைத்தார் ஜின்சன் ஜான்சன்.

மகளிர் 800மீ பிரிவில் டிண்டு லூகா 1:59.17 என்ற தேசிய ரெக்கார்டை வைத்துள்ளார்.

1500மீ ஓட்டப்பந்தய தேசிய ரெக்கார்டு:

ஆடவர் 1500மீ ஓட்டப்பந்தயத்திலும் தேசிய ரெக்கார்டை ஜின்சன் ஜான்சனே வைத்துள்ளார். 2019 ISTAF பெர்லின் மீட்டில் 3 x நிமிடம் 35.24 வினாடிகளில் 1500 மீட்டரை கடந்து ஜின்சன் ஜான்சன் சாதனை படைத்தார்.

2021ல் வாராங்கல்லில் நடந்த தேசிய ஓபன் சாம்பியன்ஷிப்பில் 4 நிமிடம் 5.39 வினாடிகளில் 1500 மீட்டரை ஓடி ஹார்மிலன் பைன்ஸ் தேசியளவில் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார்.

3000மீ தேசிய ரெக்கார்டு:

3000 மீட்டரை 7 நிமிடம் 50.31 வினாடிகளில் சுரேந்திர சிங் ஓடியதே இன்றுவரை தேசிய ரெக்கார்டாக உள்ளது.

மகளிர் 3000மீ பிரிவில் சூரியா லோகநாதன் 9 நிமிடம் 4.5 நிமிடங்களில் 2016ல் டெல்லியில் ஓடியதே தேசியளவில் சிறந்த 3000மீ ஓட்டம் ஆகும்.

5000மீ தேசியளவில் சிறந்த ஓட்டம்:

2022ல் அமெரிக்காவில் 5000மீ தொலைவை 13 நிமிடம் 25.65 வினாடிகளில் கடந்த 30 வயது அவினாஷின் சாதனையே தேசியளவிலான ரெக்கார்டு ஆகும்.

ப்ரீஜா ஸ்ரீதரன் 5000மீ தொலைவை 2010 ஆசிய போட்டிகளில் 15 நிமிடம் 15.89 வினாடிகளில் கடந்ததே மகளிர் பிரிவில் சிறந்த ரெக்கார்டு.

10000மீ தேசிய ரெக்கார்டு:

2008 ஸ்பானிஷ் ஒலிம்பிக் டிரயல்ஸில் 10000 மீட்டரை 28 நிமிடம் 2.89 வினாடிகளில் சுரேந்திர சிங் கடந்ததே ஆடவர் பிரிவில் சிறந்த ரெக்கார்டு.

ப்ரீஜா ஸ்ரீதரன் 10000 மீட்டரை 31 நிமிடம் 50.47 வினாடிகளில் கடந்து தேசிய ரெக்கார்டை தன்வசம் வைத்துள்ளார். 2010 ஆகிய போட்டிகளில் இந்த சாதனையை ப்ரீஜா படைத்தார்.

110மீ தடை ஓட்டத்தில் தேசிய ரெக்கார்டு:

110மீ தடை ஓட்டத்தில் இந்தியாவின் சித்தாந்த் திங்கலயா 13.48 வினாடிகளில் ஓடி முடித்ததே தேசிய ரெக்கார்டு.

100மீ தடை ஓட்டம் தேசிய சாதனை:

100மீ தடை ஓட்டத்தில் இந்தியாவின் ஜோதி யாராஜி என்ற வீராங்கனை 13.04 வினாடிகளில் கடந்ததே தேசிய சாதனை.

400மீ தடை ஓட்டம் தேசிய ரெக்கார்டு:

ஆடவர் 400மீ தடை ஓட்டத்தில், 2019ல் பட்டியாலாவில் நடந்த ஃபெடெரேஷன் கோப்பையில் 48.80 வினாடிகளில் ஓடி அய்யாசாமி தருண் சாதனை படைத்துள்ளார். 400மீ தடை ஓட்டத்தில் இப்போதுவரை இதுதான் தேசிய சாதனையாக உள்ளது.

மகளிர் பிரிவில் பி.டி.உஷா, 1984 ஒலிம்பிக்கில் 400மீ தடை ஓட்டத்தை 55.42 வினாடிகளில் முடித்து படைத்த சாதனை தான், இப்போது வரை தேசிய ரெக்கார்டாக உள்ளது.

4*400மீ தொடர் ஓட்டம் தேசிய சாதனை:

2010 காமன்வெல்த் போட்டிகளில் ரஹ்மத்துல்லா மொல்லா, சுரேஷ் சத்யா, ஷமீர் மோன், குரேஷி ஆகிய நால்வரும் 4*400மீ தொடர் ஓட்டத்தை 38.89 வினாடிகளில் முடித்ததே தேசியளவிலான சிறந்த ரெக்கார்டாக உள்ளது. 

மகளிர் பிரிவில் அர்ச்சனா, தனலட்சுமி, ஹீமா தாஸ் மற்றும் டுட்டீ சந்த் ஆகிய நால்வரும் 2021ல் 43.47 வினாடிகளில் ஓடியதே மகளிர் பிரிவில் சிறந்த சாதனை.

4*400மீ தொடர் ஓட்டம் தேசிய சாதனை:

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் முகமது அனாஸ், நோவா நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜீவ் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகிய நால்வரும் 3:00.25 நிமிடத்தில் முடித்ததே ஆடவர் 4*400மீ தொடர் ஓட்டத்தில் சிறந்த தேசிய ரெக்கார்டு ஆகும்.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகள் சித்ரா சோமன், ராஜ்விந்தர் கௌர், கே.எம்.பீனாமொல் மற்றும் மஞ்சித் கௌர் ஆகிய நால்வரும் 3 நிமிடம் 26.89வினாடிகளில் ஓடியதே 4*400மீ மகளிர் தொடர் ஓட்டத்தில் சிறந்த ரெக்கார்டு ஆகும்.

4*400மீ கலப்பு தொடர் ஓட்டத்தில் சிறந்த ரெக்கார்டு:

2018 ஆசிய போட்டிகளில் முகமது அனாஸ், பூவம்மா, ஹீமா தாஸ் மற்றும் ஆரோக்கிய ராஜிவ் ஆகிய நால்வரும் 3 நிமிடம் 15.17 வினாடிகளில் ஓடியதே கலப்பு 4*400 தொடர் ஓட்டத்தில் தேசியளவில் சிறந்த சாதனை ஆகும்.

மாரத்தான் தேசிய ரெக்கார்டு:

ஷிவ்நாத் சிங் 1978ல் 2 மணி நேரம் 12 நிமிடத்தில் மாரத்தான் ஓடியதே தேசியளவில் இன்றளவும் சாதனையாக உள்ளது.

மகளிர் மாரத்தானில் ஒ.பி.ஜெய்ஷா 2015 உலக சாம்பியன்ஷிப்பில் 2 மணி நேரம் 34 நிமிடம் 43 வினாடிகளில் ஓடியதே மகளிர் மாரத்தானில் சாதனையாக உள்ளது.

20 கிமீ ரேஸ்வாக் தேசிய ரெக்கார்டு:

2021  தேசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் 20 கிமீ-ஐ 1 மணி நேரம் 20 நிமிடம் 16 வினாடிகளில் எட்டி சந்தீப் குமார் சாதனை படைத்தார்.

மகளிர் பிரிவில் பிரியங்கா கோஸ்வாமி என்ற வீராங்கனை அதே ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் ஒரு மணி நேரம் 28 நிமிடம் 45 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

35 கிமீ ரேஸ்வாக் தேசிய ரெக்கார்டு:

ரேஸ்வாக்கில் 35 கிமீ தொலைவை 2 மணி நேரம் 40.16 நிமிடங்களில் கடந்து ஜுனேத் கான் படைத்ததுதான் இப்போது வரை சாதனையாக உள்ளது.

மகளிர் பிரிவில் 35 கிமீ-ஐ ராமன் தீப் சிங் 3:00.04 நேரத்தில் கடந்துதான் சாதனையாக இருக்கிறது.

50 கிமீ ரேஸ்வாக் தேசிய சாதனை:

2017 தேசிய ரேஸ்வாக்கிங் சாம்பியன்ஷிப்பில் சந்தீப் குமார் 3:55:55.9 நேரத்தில் 50 கிமீ-ஐ கடந்ததே 50 கிமீ பிரிவில் சாதனையாக உள்ளது.

நீளம் தாண்டுதல் தேசிய சாதனை:

நீளம் தாண்டுதலில் 2022 ஃபெடெரேஷன் கோப்பையில் 8.36 மீட்டரை தாண்டி சாதனை படைத்தார்.

மகளிர் நீளம் தாண்டுதலில் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6.83 மீட்டரை அஞ்சு பாபி தாண்டியதுதான் சாதனை.

மும்முறை தாண்டுதல்:

மும்முறை தாண்டுதலில் ரஞ்சித் மகேஸ்வரி 17.30மீ டைமிங்கில் ரெக்கார்டு வைத்துள்ளார்.

உயரம் தாண்டுதல்:

உயரம் தாண்டுதலில் 2.29மீ உயரம் தாண்டி தேஜஸ்வின் ஷங்கர் சாதனை படைத்துள்ளார். அதுதான் தேசியளவில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரரின் சிறந்த ரெக்கார்டு.

மகளிர் உயரம் தாண்டுதலில் 19.32மீ உயரம் தாண்டி சஹானா குமாரி படைத்த சாதனை தான் 10 ஆண்டுகளை கடந்தும் தேசியளவிலான சாதனையாக இருக்கிறது.

வட்டு எறிதலில் தேசிய அளவிலான சாதனை:

2012ல் அமெரிக்காவில் நடத்த ஓல்ட் ஸ்டைல் வட்டு எறிதல் சேலஞ்சில்  66.28 மீ எறிந்து விகாஸ் கௌடா படைத்த சாதனை தான், 10 ஆண்டுகளாக சாதனையாக இருக்கிறது. 

கமல்ப்ரீத் கௌர் 2021ல் 66.59 மீ தூரம் எறிந்து சாதனை படைத்தார்.

ஈட்டி எறிதல் தேசிய சாதனை:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, 2022 ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் 89.94 மீ தூரம் எறிந்து ஈட்டி எறிதலில் தேசியளவிலான சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ரணி 63.82மீ தூரம் எறிந்தது தான், தேசியளவிலான சாதனை. இந்த சாதனையை 2022ல் தான் அன்னு ராணி படைத்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios