Asianet News TamilAsianet News Tamil

‘ஹாட்ரிக்’ வெற்றி நோக்குடன் களம் இறங்குகிறது இந்தியா…

hat trick-win-in-india-with-a-view-down-to-the-stage
Author
First Published Dec 12, 2016, 1:52 PM IST


லக்னோ,

16 அணிகள் பங்கேற்றுள்ள ஆண்களுக்கான 11–வது உலக ஜூனியர் ஆக்கி போட்டி iலக்னோவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று ‘பி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டங்களில் பெல்ஜியம் 3–2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தையும், மலேசியா 2–0 என்ற கோல் கணக்கில் எகிப்தையும் வென்றது.

‘சி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி 6–1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பதம் பார்த்து 3–வது வெற்றியை பெற்றது.

இதே பிரிவில் நடந்த ஸ்பெயின்–நியூசிலாந்து இடையிலான மற்றொரு ஆட்டம் 3–3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

‘சி’ பிரிவில் ஜெர்மனி (9 புள்ளி) ஏற்கனவே கால்இறுதியை எட்டி விட்டது. ஸ்பெயின், நியூசிலாந்து தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகித்த போதிலும் கோல் வித்தியாசம் அடிப்படையில் ஸ்பெயின் கால்இறுதி வாய்ப்பை தட்டிச் சென்றது.

‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் கனடா, இங்கிலாந்தை துவம்சம் செய்தது.

இந்த நிலையில் இந்திய அணி கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று (மாலை 6 மணி) மோதுகிறது.

ஏறக்குறைய கால்இறுதியை உறுதி செய்து விட்ட இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி நோக்குடன் களம் இறங்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios