1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்கு 2 வெள்ளி, 1 வெண்கலம்; குண்டு எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து 2 வெள்ளி மற்றும் ஒரு வெணகலம் என்று மொத்தமாக 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், கிரிக்கெட், துப்பாக்கிச் சுடுதல், குதிரையேற்றம், படகுப் போட்டி, ஓட்டப்போட்டி, ஹாக்கி, வாலிபால், பேட்மிண்டன், டென்னிஸ் என்று பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று நடந்த பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் 4 நிமிடம் 12.74 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
Cricket World Cup 2023: காயம் காரணமாக டிம் சவுதி விலகல்? ஏற்கனவே கேன் வில்லியம்சனும் இல்லை!
இதே போன்று அண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீரர்களான அஜய்குமார் சரோஜ் வெள்ளிப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். கடந்த 1962 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண்களுக்கான 1500 மீட்டர் பிரிவில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
பெண்களுக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சீமா புனியா 58.62 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான ஷாட்புட் என்று சொல்லப்படும் குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் 8.19 மீட்டர் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் நைப் சுபேதார் அவினாஷ் சேபிள் தங்கப் பதக்கம் வென்றார்.
பெண்கள் ஹெப்தாலோனில் நந்தினி அகசரா வெண்கலம் வென்றார். இந்தப் போட்டியில் 27 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் ஜோதி யர்ராஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.
தற்போது வரையில் இந்தியா 13 தங்கம், 20 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கத்துடன் 52 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.