ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஆரோன் பிஞ்ச் தவிர முன்னாள் வீரர்களின் கருத்து கணிப்பில் இந்தியா இறுதிப் போட்டி வரை செல்லும் என்று கணித்துள்ளனர்.
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் 5 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை என்று 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பி சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.
சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, அகமாதாபாத், லக்னோ என்று 10 மைதானங்களில் இந்தப் தொடர் நடக்கிறது. இந்த தொடரில் 45 லீக் போட்டிகளும் 2 அரையிறுதிப் போட்டியும், ஒரு இறுதிப் போட்டியும் நடக்கிறது.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை தொடர் என்பதால், இந்தியாவிற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சீனியர் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிகள் எல்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று கருத்து கணித்துள்ளனர் என்று பார்க்கலாம்.
துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் – 11 தங்கத்துடன் இந்தியா 4ஆவது இடம்!
ஜாக் காலிஸ் – இந்தியா – இங்கிலாந்து
கிறிஸ் கெயில் – இந்தியா – பாகிஸ்தான்
ஷேன் வாட்சன் – இந்தியா – ஆஸ்திரேலியா
தினேஷ் கார்த்திக் – இந்தியா – பாகிஸ்தான்
பாப் டூ ப்ளெசிஸ் – இந்தியா – ஆஸ்திரேலியா/நியூசிலாந்து
வாக்கர் யூனிஸ் – இந்தியா – இங்கிலாந்து
டேல் ஸ்டெயின் – இந்தியா – இங்கிலாந்து
இர்பான் பதான் – இந்தியா – தென் ஆப்பிரிக்கா
முரளி கார்த்திக் – இந்தியா – பாகிஸ்தான்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் – இந்தியா – ஆஸ்திரேலியா
பியூஸ் சாவ்லா – இந்தியா – இங்கிலாந்து
ஆரோன் பிஞ்ச் – ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா
இந்தியாவிற்கு எச்சரிக்கை மணி அடித்த மிட்செல் ஸ்டார் – வார்ம் அப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்!
Cricket World Cup 2023: ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை 2023க்கான 10 அணி வீரர்கள்!
