harbajan sing tweet about the victory of panjab team at pune
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்ற நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றதையடுத்து, தலகைலகப்இருக்கணும், ஒவ்வொருதமிழனும்வீரமாமீசையமுறுக்கணும் என தமிழில் டுவீட் போட்டு அசத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வரை மும்பை இண்டியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங், தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை அணி அவரை ஏலம் எடுத்த நாள் முதலே அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழில் பதிவுகள் இட்டு அசத்தி வருகிறார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வழக்கம்போல் தமிழ்ல் பதிவிட்டுள்ளார்.
அதில் “எங்க டீமுக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது அன்ப கொட்டிக்கொடுக்குற தமிழ்நாட்டுக்கு, உயிரக்குடுத்தாச்சும் கப் ஜெய்ச்சு பெருமை சேக்கனும்ங்கற பயம் நிறையா இருக்கு.ஒரே ஒரு ஆசை தான்,@IPL முடியும்போது "தல" கைல கப் இருக்கணும்,ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் @ChennaiIPL #கற்றவை”. என தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்கின் இந்தப் பதிவு சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களிடையே வைரலாக பரவி வருகிறது. ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
