gt vs lkn: மும்பையில் நடந்து வரும் 15வதுசீசன் ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற 159ரன்கள்இலக்கு நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

மும்பையில் நடந்து வரும் 15வதுசீசன் ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற 159ரன்கள்இலக்கு நிர்ணயித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.

லக்னோ அணியின் ஸ்கோர் உயர்வுக்கு இருவர் மட்டமே காரணம் என்று கூறலாம்.ஒருவர் தீபக் ஹூடா(55), பதோனி(54) ஆகியோர் மட்டும்தான். ஒருகட்டத்தில் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது. ஆனால் 5-வதுவிக்கெட்டுக்கு பதோனி, ஹூடா ஜோடி இணைந்து அணியைச்சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இதில் டெல்லியைச் சேர்ந்த இளம்வீரர் பதோனி அற்புதமான ஆட்டத்தை ஆடி, தனது முதல் அரைசதத்தை பதிவுசெய்தார். 
லக்னோ அணி தொடக்கத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் போட்டி ஸ்வாரஸ்யமின்றி சென்றுவிடுவோம் என்ற கருதப்பட்டது. ஆனால், 5-வது விக்கெட்டு ஹூடா, பதோனி ஜோடி ஆட்டத்தை போக்கையே மாற்றியது.

குஜராத் அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். டெஸ்ட் மேட்ச் பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷமி 25 ரன்களுக்கு3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் ஆரோன் 45 ரன்கள் வாரிக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ரஷித்கான், பெர்குஷன் இருவரும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். கேப்டன் ஹர்திக் பாண்டியா நீண்டகாலத்துக்குப்பின் பந்துவீசினாலும் விக்கெட் எடுக்கவி்ல்லை, ரன்களை வாரிக்கொடுத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக கே.எல்.ராகுல், டீ காக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஷமி வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் ராகுல் விக்கெட் கீப்பர் மேத்யூவேடிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து மணிஷ் பாண்டே களமிறங்கினார்.

அடுத்து ஷமி வீசிய 3-வது ஓவரை டீ காக் எதிர்கொண்டார் . ஷமி 2-வது பந்தில் அருமையான இன்கட்டர் வீசி க்ளின்போல்டாக்கி டீகாக்கை7 ரன்னில் வெளியேற்றினார். அடுத்து இவான் லூயிஸ் களமிறங்கினார். வரும் ஆரோன் வீசிய 4-வது ஓவரில் லூயிஸ் (10)கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து தீபக் ஹூடா உள்ளேவந்தார். 

ஷமி வீசிய 5-வது ஓவரில் க்ளீன் போல்டாகி மணிஷ் பாண்டே(5) பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக பதோனி களமிறங்கினார். 
பவர்ப்ளே முடிவில் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி திணறியது. தீபக் ஹூடா, பதோனி இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கி அணியை வழிநடத்தினர். 10ஓவர்கள் முடிவில் 47 ரன்கள் மட்டுமே லக்னோ அணி சேர்த்தது.

ஹர்திக் வீசிய 11-வது ஓவரில் ஹூடா 2 பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார்.ஆரோன் வீசிய 13-வது ஓவரை குறிவைத்த ஹூடா விளாசினார்.இரு பவுண்டரி ஒருசிக்ஸர் என 17 ரன்கள் அடித்தார். 36 பந்துகளில் ஹூடா அரைசதம் அடித்து தனது பொறுப்பை நிரூபித்தார். 
ஹர்திக் வீசிய 15-வது ஓவரில் பதோனி 3பவுண்டரி, ஒருசிக்ஸர் உள்பட 19 ரன்கள் விளாசினார். 15-வது ஓவரில்தான் லக்னோ அணி 100 ரன்களை எட்டியது. 

ரஷித் கான் வீசிய 16-வது ஓவரில் பதோனி ஒருசிக்ஸர் விளாசினார். அதேஓவரின் 5-வது பந்தில் ஹூடா(55ரன்கள் 41பந்துகள் 6பவுண்டரி, 2சிக்ஸர்) கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 5-வதுவிக்கெட்டுக்கு பதோனி, ஹூடா இருவரும் 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து குர்னல் பாண்டியா களமிறங்கி பதோனியுடன் சேர்ந்தார். ஷமி வீசிய 18வது ஓவரில் குர்னல் பாண்டியா 2 பவுண்டரிகளையும், பதோனி ஒருபவுண்டரி என 15 ரன்கள் சேர்த்தனர்.

பெர்குஷன் வீசிய 19-வது ஓவரில் சிக்ஸர் அடித்து பதோனி 32 பந்துகளில் முதலாவது அரைசதத்தை நிறைவு செய்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். குர்னல் பாண்டியா 21 ரன்களிலும், சமீரா ஒரு ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
20ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது