GIPKL 2025 Championship Trophy : 2025 ஆம் ஆண்டு முதல் சீசனை தொடங்கும் குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடருக்கான சாம்பியன்ஷிப் டிராபி வெளியிடப்பட்டுள்ளது.
GIPKL 2025 Championship Trophy : குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் தொடரானது ஏப்ரல் 18 ஆம் தேதி குருகிராம் பல்கலைக்கழகத்தில் மிக பிரமாண்டமாக தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு தனது அறிமுக சீசனை தொடங்கும் ஜிஐபிகேஎல் (GIPKL) தொடரில் நார்வே, எகிப்து, இங்கிலாந்து, கென்யா, அர்ஜென்டினா, ஜெர்மனி மற்றும் போலந்து உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். உலகளவில் கபடி விளையாட்டை மேம்படுத்தும் முயற்சியின் முதல் கட்டமாக ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து விளையாடும் கபடி லீக் தொடர் நடத்தப்படுகிறது. இந்த லீக் தொடரை ஹோலிஸ்டிக் இன்டர்நேஷனல் பிரவாசி ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நடத்துகிறது.
GIPKL 2025: ஏப்ரல் 18 முதல் ஒவ்வொரு நாளும் 3 போட்டிகள் ; களைகட்டும் கபடி திருவிழா!
இந்த கபடி லீக் தொடரானது சோனி ஸ்போர்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதோடு, இந்த தொடரில் 6 ஆண்கள் அணி மற்றும் 6 பெண்கள் அணி என்று மொத்தமாக 12 அணிகள் இடம் பெற்று 36 போட்டிகளில் விளையாடுகின்றன.
ஆண்கள் அணிகள்:
மராத்தி கழுகுகள் (Marathi Vultures)
போஜ்புரி சிறுத்தைகள் (Bhojpuri Leopards)
தெலுங்கு பாந்தர்ஸ் (Telugu Panthers)
தமிழ் லயன்ஸ் (Tamil Lions)
பஞ்சாபி டைகர்ஸ் (Punjabi Tigers)
ஹரியான்வி ஷார்க்ஸ் (Haryanvi Sharks)
குளோபல் இந்தியன் பிரவாசி கபடி லீக் 2025 – போட்டி அட்டவணை, எந்த சேனலில் ஒளிபரப்பு?
பெண்கள் அணிகள்:
மராத்தி ஃபால்கன்ஸ் (Marathi Falcons)
போஜ்புரி லிபார்ட்ஸ் (Bhojpuri Leopardess)
தெலுங்கு சிறுத்தைகள் (Telugu Cheetahs)
தமிழ் சிங்கம் (Tamil Lioness)
பஞ்சாபி பெண் புலி (Punjabi Tigress)
ஹரியான்வி ஈகிள்ஸ் (Haryanvi Eagles)
விராட் கோலி – அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பில் கலந்து கொண்ட ஜாம்பவான்கள் யார் யார் தெரியுமா?
இந்த நிலையில் தான் சமீபத்தில் இந்த சீசனுக்கான முதல் டிராபி வெளியிடப்பட்டது. டிராபி வெளியீட்டு விழாவில் ஹரியானா அரசின் தொழில் மற்றும் வணிகத்துறை முதன்மைச் செயலாளர் சுரேஷ், முன்னாள் இந்திய கபடி அணியின் கேப்டன் தீபக் ஹூடா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் இணைந்து ஹோலிஸ்டிக் சர்வதேச பிரவாசி விளையாட்டு சங்கத்தின் தலைவர் காந்தி டி. சுரேஷ் கலந்து கொண்டு டிராபியை வெளியிட்டார்.
