நெற்றியில் பெரிய பொட்டு, சுடிதார், துப்பட்டா அணிந்து திருநங்கையைப் போன்ற தோற்றத்தில் இணையதளத்தில் வலம் வரும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரின் புகைப்படும் தற்போது வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனராகவும், ஒன் டவுன் களமிறங்கி வந்தவர் கவுதம் கம்பீர். தற்போது இவர் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்து வருகிறார். கவுதம் கம்பீர், அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூகம் சார்ந்த பல விஷயங்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறார். 

இந்த நிலையில், கம்பீர் போட்ட வேடம் ஒன்று பெரும் பரபரப்பாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. கம்பீர் அப்படி என்னதான் வேடம் போட்டார்...!  திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூவாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற வருகிறது. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். 

 இதேபோன்ற விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவை திருநங்கைகள், திருநம்பிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டாவடுவது வழக்கம். வட இந்தியாவில் பிரபலமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பீர் அழைக்கப்பட்டிருந்தார். அவர்களை அழைப்பை ஏற்ற கவுதம் கம்பீரும் விழாவில் கலந்து கொண்டார். 

இதில் என்ன விசேஷம் என்றால், சுடிதார், துப்பட்டா அணிந்தும், நெற்றியில் பெரிய குங்குமம் வைத்துக் கொண்டும் திருநங்கையைப் போன்று விழாவில் கலந்து கொண்டு, திருநங்கைகள் - திருநம்பிகள் வாழ்க்கை குறித்து பேசினார். சுடிதார், துப்பட்டா சகிதம் இருக்கும் கம்பீரின் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தைப் பார்ப்பவர்கள் பலரும் கம்பீரை பாராட்டி வருகின்றனர். கம்பீர் மிகச் சிறந்த மனிதர், நல்லவர் என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.