Gautam Gambhir resigns as captain Ishanta Sharma appointed as new captain
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியை கெளதம் கம்பீர், ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய கேப்டனாக இஷாந்த சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நான்கு சீசன்களில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட கம்பீர், தற்போது அந்தப் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், அந்த அணிக்காக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன் என்றுத் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடும் டெல்லி அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணியின் தற்போதைய விவரம்:
இஷாந்த் சர்மா (கேப்டன்), கெளதம் கம்பீர், உன்முக்த் சந்த், நிதிஷ் ராணா, துருவ் ஷோரே, மிலிந்த் குமார், ஹிம்மத் சிங், குணால் சண்டீலா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), மனன் சர்மா, விகாஸ் சர்மா, புல்கிட் நரங், நவ்தீப் சைனி, விகாஸ் டோகாஸ், குல்வந்த் கெஜ்ரோலியா.
