Gambling in Test match ICC asks for evidence form aljazeera...

டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் என்று வெளியிட்டீர்களே அதற்கான ஆதாரங்களை தாருங்கள் என்று அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு ஐசிசி தலைமை செயல் அலுவலர் டேவிட் ரிச்சர்ட்சன் கேட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை போன்ற நாடுகளிடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் ஃபிக்ஸிங், ஆடுகளத்தை சாதகப்படி அமைத்தல் உள்ளிட்ட முறைகேடுகள் தாவூத் இப்ராஹிம் கும்பல் மூலம் நடந்ததாக அல்ஜசீரா தொலைக்காட்சி ஸ்டிங் ஆப்ரேஷன் எனப்படும் ரகசிய புலன் விசாரணை மூலம் வெளிக்கொண்டு வந்தது. 

இந்த நிலையில் இந்த புகார்கள் தொடர்பாக ஐசிசி குழு விசாரணை மேற்கொள்ளும். எனவே இதுதொடர்பான அனைத்து விடியோ ஆதாரங்களையும் வழங்க வேண்டும் என அல்ஜசீராவுக்கு ஐசிசி வலியுறுத்தியிருந்தது. 

ஆனால், தங்கள் எங்கு செய்தி சேகரித்தோம் என்பது தொடர்பான ரகசியம் வெளியாகிவிடும் என அத்தொலைக்காட்சி ஆதாரங்களை தர முன்வரவில்லை.

இந்த நிலையில் தலைமை செயல் அலுவலர் டேவிட் ரிச்சர்ட்சன் நேற்று, "இதுதொடர்பான முழுமையான ஆதாரங்களை தர வேண்டும்" என்று அல்ஜசீராவிடம் வலியுறுத்தி உள்ளார்.