உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், தோனி மற்றும் தவான் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் ஆடி நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியுள்ளார். 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தோனி ஃபார்மில் இல்லாமல் தவித்ததால், தொடர்ந்து சொதப்பிவந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடும் தோனி, பின்வரிசையில் இறங்குவதால் பெரும்பாலும் டி20 போட்டிகளில் பேட்டிங் ஆடும் வாய்ப்பை பெறுவதில்லை. அதனால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பேட்டிங் ஆடுகிறார். அதைத்தவிர வேறு போட்டிகளில் ஆடாததால் பேட்டிங்கில் பெரியளவில் டச்சில் இல்லாததால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேட்டிங்கில் சோபிக்கவில்லை. 

உலக கோப்பை நெருங்கிவிட்டதால் மீண்டும் ஃபார்முக்கு வரும் வகையில், அவர் உள்நாட்டு போட்டிகளில் ஆடி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று கவாஸ்கர் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். ஆனால் தோனி உள்நாட்டு போட்டிகளில் ஆடவில்லை. ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே ஆகியவற்றில் தோனி ஆடவேண்டும் என்ற கவாஸ்கரின் குரலுக்கு தோனி செவிமடுக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலுமே அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இது இந்திய அணிக்கு மகிழ்ச்சியான விஷயம்.

தோனி ஃபார்முக்கு திரும்பிய அதேவேளையில், ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர் தவான் சரியாக ஆடவில்லை. மூன்று போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 55 ரன்கள் மட்டுமே அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து தவான் ஓரங்கட்டப்பட்டு விட்டதால் அவரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். எனவே அவரும் உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியுள்ளார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பை அணியில் இடம்பெறும் அனைத்து வீரர்களும் சிறந்த ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம். எனவே அவர்கள் உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பேசிய காம்பீர், சில வீரர்கள் முதல்தர போட்டிகளில் ஆட வேண்டும். அவர்களை உள்நாட்டு போட்டிகளில் ஆடுமாறு தேர்வுக்குழு வலியுறுத்த வேண்டும். உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், அனைத்து வீரர்களுமே நல்ல ஃபார்மில் இருக்க வேண்டியது அவசியம். எனவே தோனி, தவான், ராயுடு போன்ற வீரர்கள் முதல் தர போட்டிகளில் ஆட வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தினார்.