Gailie won gold medal and made world record at World Swimming Championship
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் கனடாவின் கைலீ மாஸோ தங்கப் பதக்கம் வென்று உலக சாதனையும் படைத்துள்ளார்.
உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரியில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 100 மீ. பேக்ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்ற கனடாவின் கைலீ மாஸோ 58.10 விநாடிகளில் இலக்கை எட்டியதன்மூலம் அவர் தங்கம் வென்றார். அதுமட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்தார்.
முன்னதாக பிரிட்டனின் ஜெம்மா ஸ்போஃப்போர்த் 58.12 விநாடிகளில் இலக்கை எட்டியதே உலக சாதனையாக இருந்தது. இந்த நிலையில் கைலீ எட்டியுள்ள நேரம் புதிய உலக சாதனையாக தொடரும்.
உலக சாதனை குறித்து கைலீ மாஸோ பேசியது:
“நான் உலக சாதனை படைத்ததை நீண்ட நேரம் உணரவில்லை. உலக சாதனை படைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதை வெளிப்படுத்த வார்த்தையில்லை' என்றார்.
இதேபிரிவில் அமெரிக்காவின் கேத்தலீன் பேக்கர் வெள்ளிப் பதக்கமும், ஆஸ்திரேலியாவின் எமிலி சீபோம் வெண்கலமும் வென்றனர்.
