French Open Tennis Nadal Vosanaki forwarded to next to level

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், கரோலின் வோஸ்னியாக்கி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் நான்காவது சுற்றில் ஸ்பெயினின் நடால் மற்றும் சகநாட்டவரான ராபர்ட்டோ பெளதிஸ்டா அகட் மோதினர்.

இதில், 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அகட்டை தோற்கடித்தார் நடால்.

நடால், பிரெஞ்சு ஓபனில் 11-ஆவது முறையாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.

நடால் தனது காலிறுதியில் சகநாட்டவரான கரீனோ பஸ்டாவை எதிர்கொள்கிறார்.

முன்னதாக கரீனோ பஸ்டா தனது 4-ஆவது சுற்றில் 4-6, 7-6 (2), 6-7 (8), 6-4, 8-6 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.

மகளிர் ஒற்றையர் 4-ஆவது சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி மற்றும் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா மோதியதில் 6-1, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் குஸ்நெட்சோவாவை தோற்கடித்தார் வோஸ்னியாக்கி.

வோஸ்னியாக்கி தனது காலிறுதியில் லத்வியாவின் ஜெலீனா ஆஸ்டாபென்கோவை எதிர்கொள்கிறார்.

ஜெலீனா தனது 4-ஆவது சுற்றில் 2-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசருக்கு தோல்வியளித்து வென்றார்.