French Open tennis Del Potro in semi-finals after 9 years Confrontation with Natal today
பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால் மற்றும் டெல் போட்ரோ அரையிறுதியின் இன்று மோதுகின்றனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் முந்தைய நாள் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் நேற்று தொடர்ந்து நடந்தன.
அதனொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 10 முறை சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை எதிர்கொண்டார்.
இதில், 4–6, 6–3, 6–2, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார் நடால்.
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ 7–6 (5), 5–7, 6–3, 7–5 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதியை எட்டியுள்ள டெல் போட்ரோ அடுத்து ரபெல் நடாலுடன் இன்று மோதுகிறார்.
