French Open tennis Crotia player defeat by Nadal
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மற்றும் அர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லா மோதினர்.
இதில், குய்டோ பெல்லா 6-2, 6-1, 6-1 என்ற செட்களில் வீழ்த்தினார் நடால்.
இதர 2-வது சுற்றுகளில் குரோஷியாவின் மரின் சிலிச், 6-2, 6-2, 6-7(3/7), 7-5 என்ற செட்களில் போலாந்தின் ஹியூபர்ட் ஹர்கௌஸ வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 6-வது இடத்திலிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் 6-3, 3-6, 7-6(7/5), 6-4 என்ற செட் கணக்கில் உருகுவேயின் பாப்லோ கியுவைஸ தோற்கடித்தார்.
பிரிட்டனின் கைல் எட்மண்ட் 6-0, 1-6, 6-2, 6-3 என்ற செட்களில் ஹங்கேரியின் மார்டன் ஃபக்சோவிகௌஸ வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவ் 6-3, 6-7(0/7), 7-6(7/2), 6-1 என்ற செட்களில் உக்ரைனின் செர்கி ஸ்டாகோவ்ஸ்கியை தோற்டித்தார்.
பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்கட் - டுனீசியாவின் மாலேக் ஜாஸிரியையும், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி - ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மரையும் வீழ்த்தினார்.
அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன் - ஜெர்மனியின் ஜான் லெனார்டு ஸ்ட்ரஃபையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
