French Open Sai Praneeth HS pranai advanced to next level

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், எச்.எஸ்.பிரணாய், ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தனது முதல் சுற்றில் தாய்லாந்தின் கோஷித்துடன் மோதினார். இதில், 21-13, 21-23, 21-19 என்ற செட் கணக்கில் கோஷித்தை வீழ்த்தினார் .சாய் பிரணீத்.

அதேபோன்று இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் மற்றும் தென் கொரியாவின் லீ ஹியூன் மோதினர். இதில், 21-15, 21-17 என்ற நேர் செட்களில் லீ ஹியூனை வீழ்த்தினார் எச்.எஸ்.பிரணாய்.

இந்த வெற்றியின்மூலம் சாய் பிரணீத், எச்.எஸ்.பிரணாய் ஆகிய இருவரும் பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.