Foucault smashed five times in the first time
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார் கனடாவின் இயுஜின் பெளசார்டு.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில், மகளிர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஷரபோவா - பெளசார்டு எதிர்கொண்டனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 7-5, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை வீழ்த்தி பெளசார்டு வெற்றி பெற்றார்.
ஷரபோவாவுடன் ஐந்து முறை மோதி, முதல்முறை வெற்றிப் பெற்றுள்ளார் பெளசார்டு.
பெளசார்டு தனது 3-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை சந்திக்கிறார்.
மாட்ரிட் ஓபன் ஆடவர் பிரிவின் முதல் சுற்றில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஆஸ்திரேலியாவின் நிக் கைஜியோஸ் ஆகியோர் அடுத்த சுற்றுக்கும் முன்னேறினர்.
