Asianet News TamilAsianet News Tamil

விறுவிறுப்பான ஐபிஎல் முதல் ஆட்டத்தில் சென்னை அணி திரில் வெற்றி…. பிராவோஅதிரடி ஆட்டம்….கொண்டாட்டம்…

First IPL Cricket chennai CSK team thril win in Mumbai
First IPL Cricket  chennai CSK team thril win in Mumbai
Author
First Published Apr 8, 2018, 1:18 AM IST


ஐபிஎல் 11 ஆவது சீசன் முதல் போட்டியில் மும்பை இந்தியன் அணியை அசத்தலாக வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பிராவோவின் அதிரடி ஆட்டம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது. பிராவோ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல் 11-வது சீசனின் முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு ஆண்டு தடைகளுக்கு பின் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிது.

First IPL Cricket  chennai CSK team thril win in Mumbai

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், எவின் லெவிசும் களமிறங்கினர்.

லெவிஸ் டக் அவுட் ஆனார். ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய இஷான் கிஷானும், சூர்யகுமார் யாதவும் இணைந்து ரன் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ரன்களும், இஷான் கிஷான் 29 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

First IPL Cricket  chennai CSK team thril win in Mumbai

அதன்பின் ஹர்திக் பாண்டியா - குருணல் பாண்டியா ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா 21 ரன்களுடனும், குருணல் பாண்டியா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியின் பந்துவீச்சில் வாட்சன் இரண்டு விக்கெட்களும், இம்ரான் தாஹிர், தீபக் சஹார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

First IPL Cricket  chennai CSK team thril win in Mumbai

இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு களமிறங்கினர்.

ஆட்டத்தின் 4-வது ஓவரில் ஷேன் வாட்சன் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து 6-வது ஓவரில் சுரேஷ் ரெய்னா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் அம்பதி ராயுடு 22 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தோனியும் நீடிக்கவில்லை. அவர் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதனால் சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

First IPL Cricket  chennai CSK team thril win in Mumbai

கேதார் ஜாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுமையாக விளையாடியது. அணியின் எண்ணிக்கை 75 ஆக உள்ளபோது ஜடேஜாவும் அவுட்டானார். அடுத்து இறங்கிய சாஹர் டக் அவுட் ஆனார். சென்னை அணி 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி 7 ஓவரில் 82 ரன்கள் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அடுத்து வந்த ஹர்பஜன் 8 ரன்களுடனும், மார்க் வுட் ஒரு ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். 

First IPL Cricket  chennai CSK team thril win in Mumbai

பிராவோ மட்டும் தனியாக நின்று போராடினார். இவர் ஐபிஎல் தொடரின் முதல் அரை சதமடித்து அசத்தினார். இவர் 30 பந்துகளில் 7 சிக்சர், 3 பவுண்டரியுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ரிடயர் ஹர்ட் ஆகியிருந்த கேதார் களமிறங்கினார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 3 பந்துகளில் ரன் எடுக்கவில்லை. 4வது பந்தில் ஒரு சிக்சரும், 5-வது பந்தில் ஒரு பவுண்டரியும் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் கேதார் ஜாதவ் 24 ரன்களுடனும், இம்ரான் தாஹிர் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

First IPL Cricket  chennai CSK team thril win in Mumbai

மும்பை அணி சார்பில் மயங்க் மார்கண்டே 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டும், முஸ்டாபிசுர் ரகுமான், பும்ரா, மெக்லனேகன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் விளையாட வந்த  சென்னை சிஎஸ்கே அணி அனைவரும் எதிர்பார்த்தபடியே தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு முழு முதல் காணமாக அருந்த பிராவோ அனைவரின் பாராடுதல்களையும் பெற்று வருகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios