Asianet News TamilAsianet News Tamil

FIFA World Cup:வரலாறு காணாத அளவிற்கு கத்தாரில் அதிகபட்ச டிக்கெட் விலை! செலவு, பரிசுத்தொகை, வருவாய் முழு விவரம்

கத்தாரில் நடக்கும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகளை காண டிக்கெட் விலை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச விலைக்கு விற்கப்படுகிறது. ஃபிஃபா உலக கோப்பையை நடத்த கத்தார் செய்த ஏற்பாட்டு செலவு, அணிகளுக்கு பரிசுத்தொகை, வருமானம் ஆகிய விவரங்களை பார்ப்போம்.
 

fifa world cup 2022 qatar most expensive tickets and other economics of the tournament
Author
First Published Nov 19, 2022, 6:11 PM IST

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை போட்டிகள் நவம்பர் 20 (நாளை) முதல் டிசம்பர் 18 வரை நடக்கிறது. கத்தாரில் நடக்கும் 22வது ஃபிஃபா உலக கோப்பையை முன்னிட்டு ஒட்டுமொத்த கத்தார் நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கத்தாரில் நடக்கும் ஃபிஃபா உலக கோப்பையில் 32 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. உலக கோப்பை போட்டிகள் 8 மைதானங்களில் நடத்தப்படுகின்றன.

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை: கடும் கட்டுப்பாடுகளால் கதறும் ரசிகர், ரசிகைகள்..!

2010ம் ஆண்டு இந்த ஃபிஃபா உலக கோப்பையை நடத்தும் உரிமையை பெற்ற கத்தார், அதுமுதல் 8 ஸ்டேடியங்களை தயார் செய்துள்ளது. லுசைல் ஸ்டேடியம், அல் பேத் ஸ்டேடியம், ஸ்டேடியம் 974, கலீஃபா சர்வதேச அரங்கம், எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம், அல் துமாமா ஸ்டேடியம், அல் ஜனுப் ஸ்டேடியம், அகமது பின் அலி ஸ்டேடியம் ஆகியவற்றில் 6 ஸ்டேடியங்களை புதிதாக கட்டமைத்துள்ளது. 2 ஸ்டேடியங்களை புதுப்பித்துள்ளது. 

ஃபிஃபா உலக கோப்பையை நடத்துவதற்காக மொத்தமாக $220 பில்லியன் கத்தார் செலவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. $10 பில்லியன் ஸ்டேடியங்களை அமைப்பதற்கும், $4 பில்லியன் உலக கோப்பையை நடத்தும் உரிமத்தை பெறுவதற்கும் செலவு செய்துள்ளது. $210 பில்லியனை புதிய ஏர்போர்ட்டுகள், சாலைகள், ஹோட்டல்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் செலவு செய்துள்ளது.

கத்தாரில் நடக்கும் 22வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளை காண டிக்கெட் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. டிசம்பர் 18ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விலை சுமார் ரூ.66000 ஆகும். இது ரஷ்யாவில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஃபிஃபா உலக கோப்பை டிக்கெட் விலையை விட, 40 சதவிகிதம் அதிகம். மற்ற போட்டிகளுக்கான டிக்கெட் விலை சுமார் ரூ.28000 ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் ஃபிஃபா உலக கோப்பைகளில் இல்லாத அளவிற்கு இந்த டிக்கெட் விலை அதிகம். அப்படியிருந்தும் இதுவரை 30 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளன.

ஃபிஃபா உலக கோப்பை பரிசுத்தொகையாக $440 மில்லியன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.3586 கோடியாகும். ஃபிஃபா உலக கோப்பையை வெல்லும் அணிக்கு தங்க கோப்பையுடன் சேர்த்து ரூ.360 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

ஃபிஃபா உலக கோப்பையில் ஆடும் சில கால்பந்து வீரர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

போட்டிகளை நேரில் காணவரும் பார்வையாளர்களின் டிக்கெட், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றின் மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது. கடந்த ஃபிஃபா உலக கோப்பையை விட இந்த உலக கோப்பை ஒளிபரப்பு உரிமம் 10 சதவிகிதம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. எனவே தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தின் மூலமாக மட்டுமே லாபம் ஈட்டப்பட்டுவிட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios