Federaton cup Chennai and Tamil Nadu qualify for final round ...
பெடரேசன் கோப்பை கூடைப்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு சென்னை ஐஓபி ஆடவர் மற்றும் தமிழக மகளிர் அணிகள் தகுதி பெற்றன.
பெடரேசன் கோப்பை போட்டிகள் இந்திய கூடைப்பந்து சம்மேளனம், ஆந்திர மாநில கூடைப்பந்து சங்கம் சார்பில் 32-வது சித்தூரில் நடைபெற்று வருகின்றன.
இதன் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன. அதில், ஆடவர் அரையிறுதிப் போட்டியில் ஐஓபி அணி மற்றும் கொச்சி சுங்கத்துறை அணி மோதின.
இதில், 87-74 என்ற புள்ளிக்கணக்கில் ஐஓபி அணி வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
அதேபோன்று, மற்றொரு போட்டியில் ஓஎன்ஜிசி அணி 68-65 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு எம்இஜி அணியை வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.
மகளிர் பிரிவில் தமிழகம் 82-64 என்ற புள்ளிக்கணக்கில் கிழக்கு ரயில்வேயையும், கேரளம் 60-42 என்ற புள்ளிக்கணக்கில் மகாராஷ்டிரத்தையும் வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறின.
