Fed Cup tennis India defeated Hong Kong to victory

ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஹாங்காங்கை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றிப் பெற்றது.

ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அங்கிதா ரெய்னா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் லிங் ஜாங்கை வென்றார்.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் கர்மான் தன்டி கெüர் 6-3, 6-4 என்ற செட்களில் யுடிஸ் சாங்கை வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவில் பிரார்தனா தோம்ப்ரே - பிரஞ்சலா யட்லபள்ளி இணை 6-2, 6-4 என்ற செட்களில் குவான் யாவ் நிக் - சிங் ஹு வு இணையை வென்றது.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் "பி' பிரிவில் 4-வது இடத்தில் இருக்கும் சீன தைபேவை அணியை எதிர்கொள்கிறது.

இதில் வெற்றப் பெறும் அணி குரூப்-1-ல் நீடிக்கும். தோற்கும் அணி குரூப்-2-க்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.