Fed Cup India defeated by kajakasthan
ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா அபார வெற்றி பெற்றும் ஒட்டுமொத்தமாக கஜகஸ்தான் இந்தியாவை எளிதில் வெற்றிக் கொண்டது.
ஃபெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா கஜகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவாவை அதிரடியாக வென்றார். எனினும், ஒட்டுமொத்தமாக கஜகஸ்தானுக்கு எதிரான இந்த சுற்றில் இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 81-ஆம் நிலை வீராங்கனையான யூலியாவுக்கு எதிரான ஆட்டத்தை 2 மணி 25 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்த அங்கிதா 6-3, 1-6, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டில் உலகின் 27-ஆம் நிலை வீராங்கனையாக இருந்த யூலியா, உலகின் முதல் 10 வீராங்கனைகளையும் வீழ்த்தியுள்ளார். அவருக்கெதிரான வெற்றி அங்கிதாவுக்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் கர்மான் கெüர் தன்டி, உலகின் 55-ஆம் நிலை வீராங்கனையான ஜரினா டியாஸிடம் வீழ்ந்தார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனிதா - பிரார்த்தனா தோம்ப்ரே இணை 0-6, 4-6 என்ற செட்களில் ஜரினா டியாஸ்-யூலியா புடின்ட்சேவா இனையிடம் வீழ்ந்தது.
கஜகஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் தோல்வியால் ஃபெட் கோப்பை பிளே ஆஃப் வாய்ப்பை இந்தியா இழந்தது. எனினும், தனது அடுத்த குரூப் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது இந்தியா.
