Asianet News TamilAsianet News Tamil

மார்க்கை தூக்கியடித்த இங்கிலாந்து; ஜென்னிங்ஸை அணியில் சேர்த்து அதிரடி...

England thrown up the mark Join Jenny team in action ..
England thrown up the mark Join Jenny team in action ...
Author
First Published May 29, 2018, 1:15 PM IST


பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மார்க்கை நீக்கிவிட்டு, ஜென்னிங்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரண்டு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்தது. 

அதில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் வருகிற 1-ஆம் தேதி தொடங்குகிறது. 

இதில், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, முதலாவது டெஸ்டில் மோசமாக ஆடிய மார்க் ஸ்டோன்மேன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 25 வயதான பேட்ஸ்மேன் ஜென்னிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios