மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சாய்த்து முதல் இன்னிங்ஸைக் கைப்பற்றியது இங்கிலாந்து.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் பகலிரவாக நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 135.5 ஓவர்களில் 514 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக அலாஸ்டர் குக் 243 ஓட்டங்களும், கேப்டன் ஜோ ரூட் 136 ஓட்டங்களும் குவித்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோஸ்டான் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர். முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளாக்வுட் 76 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களும் குவித்தார். ஆனால், எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட்டாக அந்த அணி 47 ஓவர்களில் 168 ஓட்டங்களுக்குச்சுருண்டது.

இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 346 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு "பாலோ-ஆன்' கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 45.4 ஓவர்களில் 137 ஓட்டங்களுக்கு அவுட்டானது.

அந்த அணியில் பிரத்வெயிட் அதிகபட்சமாக 40 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மூன்று விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ரோலன்ட் ஜோன்ஸ், மொயீன் அலி ஆகிய தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அலாஸ்டர் குக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி வரும் வெள்ளிக்கிழமை ஹெட்டிங்லேவில் தொடங்குகிறது.