England defeated West Indies by 124 runs
மேற்கிந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து.
இங்கிலாந்து – மேற்கிந்திய அணிகள் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைப்பெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து ஒன்பது விக்கெட்டுகளுக்கு 369 ஓட்டங்கள் எடுத்தது.
7-வது வரிசையில் இறங்கிய மொயீன் அலி 53 பந்துகளில் சதத்தை எட்டினார். இங்கிலாந்து வீரர் ஒருவரின் 2-வது அதிவேக செஞ்சுரி இதுவே. அவர் 57 பந்துகளில், 7 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் எடுத்து 102 ஓட்டங்கள் குவித்திருந்தபோது கேட்ச் ஆனார்.
பென் ஸ்டோக்ஸ் 73 ஓட்டங்கள், ஜோ ரூட் 84 ஓட்டங்கள் என்று அரை சதத்தை தாண்டினர்.
பின்னர் ஆடிய மேற்கிந்தியா 39.1 ஓவர்களில் 245 ஓட்டங்களுக்கு ஆல் ஔட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கிறிஸ் கெய்ல் 78 பந்துகளில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடித்து 94 ஓட்டங்களில் ரன் ஔட் ஆனார்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
