Egypt Mohammed Salah is the best footballer of the year 2017 ...
அரபு நாடுகளின் 2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரராக எகிப்து கால்பந்து அணி வீரர் முகமது சாலா (25) தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அரபு நாடுகளின் 2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் என்ற சிறப்பை எகிப்து கால்பந்து வீரர் முகமது சாலா பெற்றுள்ளார்.
அரபு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டுப் பிரிவு செய்தியாளர்கள் சுமார் 100 பேரால் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் லிவர்பூல் எஃப்சி கிளப் அணியிலும் இவர் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் 17 கோல்களை அடித்துள்ள முகமது சாலா, அனைத்து போட்டிகளையும் சேர்த்து மொத்தம் 23 கோல்களைப் பதிவு செய்து அசத்தியுள்ளார்.
ரஷியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் எகிப்து அணி தேர்வானதில் அவரின் பங்கு மிகவும் முக்கியமானது.
அரபு நாடுகளின் 2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் சிரிய வீரரான ஒமர் கிரிபின் இரண்டாவது இடத்தையும், அதே நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீரர் ஒமர் அல் சோமோ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
