வங்கதேசத்தில் நடந்துவரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது.

19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை வங்கதேசத்தில் நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 அணிகளும் கலந்துகொண்டு ஆடிவருகின்றன.

இதில் ஏ பிரிவில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் பி பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 
 
இந்த தொடரில் லீக் சுற்றில் நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இந்த தொடரில் ஆடும் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியுடன்  தலைமை பயிற்சியாளர் டிராவிட் செல்லவில்லை. இந்தியா ஏ அணிக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்படும் டிராவிட், ஏ அணிக்கு தொடர்கள் இருக்கும்போது அந்த அணிக்கு பயிற்சி அளிக்க செல்லும்போது அவருக்கு பதிலாக பதிலாக டபிள்யூவி ராமன் பயிற்சியாளராக செயல்படுவது வழக்கம்.

இந்த தொடரிலும் டிராவிட்டுக்கு பதிலாக ராமன் தான் பயிற்சியாளராக செயல்படுகிறார். டிராவிட் அவர்களுடன் செல்லவில்லை என்றாலும் இளம் வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர். நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியுள்ளனர். 

இந்திய அணிக்கு பல இளம் திறமைகளை உருவாக்கி கொடுத்து கொண்டிருக்கிறார் டிராவிட். மிகச்சிறந்த கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி, இந்தியா ஏ அணி ஆகியவற்றிற்கு பயிற்சியளித்து, மயன்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மன் கில், நாகர்கோடி, கலீல் அகமது போன்ற பல இளம் திறமைகளை உருவாக்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து உருவாக்கி கொண்டிருக்கிறார்.

ராகுல் டிராவிட்டின் மாணவர்கள் அனைவரும் சிறந்த வீரர்களாக மட்டுமல்லாமல் மனவலிமை பெற்ற வீரர்களாக உருவாகின்றனர். அந்த வகையில் டிராவிட், அவர்களுடன் வங்கதேசத்திற்கு செல்லவில்லை என்றாலும்கூட ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடிவருகிறது.