Do you know any place for the Indian team?
அணிகள் தரவரிசையில் இந்தியா 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா 122 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 874 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 871 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும, இந்தியாவின் வீராட் கோலி 852 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 12-ஆவது இடத்திலும், இந்திய விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி 13-ஆவது இடத்திலும், ஷிகர் தவன் ஓர் இடத்தை இழந்து 15-ஆவது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் முதல் 10 இடங்களில் இந்தியர்கள் யாரும் இல்லை.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் காகிசோ ரபாடா 724 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இம்ரான் தாஹிர் 722 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 701 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர் அக்ஷர் படேல், நியூஸிலாந்தின் மட் ஹென்றியுடன் 11-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அமித் மிஸ்ரா 13-ஆவது இடத்திலும், அஸ்வின் 18-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல்ஹசன் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் 2-ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.
அணிகள் தரவரிசையைப் பொறுத்தவரையில் தென் ஆப்பிரிக்கா 122 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியா 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூஸிலாந்து 114 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்து 112 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
