Asianet News TamilAsianet News Tamil

இதெல்லாம் நல்லதுக்கே இல்ல... அதுக்கு அப்புறம் உங்க இஷ்டம்!! தெறிக்கவிடும் முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

இந்திய அணி இரண்டு விக்கெட் கீப்பர்களுடன் ஆடுவது நல்லதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

Dilip vengsarkar
Author
Mumbai, First Published Nov 4, 2018, 3:26 PM IST

இந்திய அணி இரண்டு விக்கெட் கீப்பர்களுடன் ஆடுவது நல்லதல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் கருத்து தெரிவித்துள்ளார். Dilip vengsarkar

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை இருந்துவரும் நிலையில், தோனியும் ஃபார்மில் இல்லாததால் தொடர்ந்து சொதப்பிவருகிறார். இந்திய அணியில் ரஹானே, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் காத்திக், ராயுடு என தொடர்ச்சியாக சுழற்சி முறையில் நடுவரிசை வீரர்கள் களமிறக்கப்பட்டனர். வர்களில் ராயுடு மட்டுமே வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அணியில் 4ம் வரிசையை நிரந்தரமாக பிடித்துள்ளார். ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடிய ராயுடு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் ஒரு சதம், ஒரு அரைசதம் என சிறப்பாக ஆடினார்.Dilip vengsarkar

எனவே 4ம் வரிசை வீரர் செட் ஆகிவிட்ட நிலையில், 5ம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். ஏற்கனவே விக்கெட் கீப்பர் தோனி இருக்கும் நிலையில், இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாததால் அவருக்கு பதிலாக பின்னர் கேதர் ஜாதவ் சேர்க்கப்பட்டார்.Dilip vengsarkar

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அந்த வரிசையில் களமிறங்கும் வீரரை உறுதி செய்ய வேண்டும் என்பதால், மீண்டும் ரிஷப்பிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. Dilip vengsarkar

இந்நிலையில், இரண்டு விக்கெட் கீப்பர்களுடன் ஆடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள திலீப் வெங்சர்கார், இரண்டு விக்கெட் கீப்பர்களுடன் ஆடக்கூடாது. அது சிறந்த அணியாக இருக்காது. இரண்டு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்படுவதற்கு அணி நிர்வாகம் தான் பொறுப்பு. தோனிதான் விக்கெட் கீப்பர். ஆனால் அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை. தோனி இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர் மற்றும் சிறந்த கேப்டன்களில் ஒருவர். ஆனால் அவரது தற்போதைய ஃபார்ம் மட்டும்தான் பிரச்னை. Dilip vengsarkar

அதுவும் ஏனென்றால், அவர் அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடுவதில்லை, உள்ளூர் போட்டிகளிலும் ஆடுவதில்லை. எனவே கணிசமான இடைவெளிக்கு பிறகுதான் போட்டிகளில் ஆடுகிறார். அதனால் பேட்டிங்கில் டச்சில் இல்லாததால்தான் பேட்டிங்கில் சொதப்புகிறார். யாராக இருந்தாலும் அது கடினம்தான் என வெங்சர்கார் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios